தேயிலை தோட்டத்தில் பறந்து வந்த கார்..அலறி அடித்து ஓட்டம் பிடித்த தொழிலாளர்கள்: கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!!

Author: Rajesh
4 April 2022, 6:44 pm
Quick Share

நீலகிரி: குன்னூர் தேயிலை தோட்டத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த கார் விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்பட சூட்டிங் களைகட்டியுள்ளது. தற்போது உதகை, குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள தூதூர் மாவட்டம் பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலைப் பறிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எங்கிருந்தோ கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் 200 மீட்டர் தொலைவில் இருந்து பறந்து வந்து தேயிலை தோட்டத்தில் விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Views: - 1106

0

0