அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து.! இருசக்கர வாகனத்தில் வந்த பெண் பலி.!!
2 August 2020, 11:37 amகோவை : திருச்சி ரோட்டில் அதி வேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஊரடங்கினால் சாலையில் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில் திருச்சி சாலையில் கார் ஒன்றை இளைஞர் அதி வேகமாக ஓட்டி வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த கார் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர் .இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மற்றொருவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர் .
ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்தின்றி வெறிச்சோடிய சாலையில், சிலர் வாகனங்களில் வேகமாக இயக்குகின்றனர். இதனால் விபத்தால் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0