கட்டைக் காலுடன் தேசியக்கொடி ஏந்தி சிலம்பாட்டம்.! சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டு!!

15 August 2020, 3:42 pm
Viruthu Student -Updatenews360
Quick Share

விருதுநகர் : கட்டைகாலுடன் கையில் தேசிய கொடி ஏந்தி 10 கிமீ தூரம் சிலம்பம் சுற்றிவந்து சாதனை படைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நாட்டின் 74 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியில் வித்தியாசமான சாதனை முயற்ச்சியாக நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக சிறுவர்கள் சிலம்பமாட 13வயது சிறுவன் கட்டைகாலுடன் கையில் தேசிய கொடி ஏந்தி 10 கிமீ தூரம் நடந்து சாதனை படைத்துள்ளான்

நாட்டின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தில் வித்தியாசமான சாதனை படைக்க எண்ணிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டங்குடியை சேர்ந்த பால்சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த 13 வயது சிறுவன் ராம்குமார். சிலம்பம் சுற்றி கட்டைகாலுடன் 10 கிமீ தூரம் கையில் தேசிய கொடியுடன் நடந்து வந்து சாதனை படைத்தார்.

கட்டங்குடி ரெட்டிசுவாமிகள் திருக்கோயிலில் பால் சிலம்பம் பயிற்சி பள்ளியின் மாணவர்கள் சுருள்வாள், வாள் கேடயம் மற்றும் சிலம்பம் சுற்றி சாதனை நடையினை தொடங்கினர். சகமாணவர்கள் சிலம்பம் சுற்றிவர காலில் கட்டை கட்டிய நிலையில் கட்டை காலுடன் கையில் தேசிய கொடியை ஏந்தி சிறுவன் ராம்குமார் தனது ஆசிரியர் வெற்றிவேல் துணையுடன் கோவிலாங்குளம் கோபாலபுரம் மற்றும் பாளையம்பட்டி வழியாக பத்து கிலோமீட்டர் தூரம் நடந்துவந்து அருப்புக்கோட்டை டிஎஸ்பி அலுலகத்தில் தனது சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

மாணவர் ராம்குமாருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக சாதனை படைத்த சாதனை நாயகனை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Views: - 30

0

0