பெண் காவலரை காதலிப்பதாக ஏமாற்றி உல்லாசம்….வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்த காவலர் மீது வழக்குப்பதிவு..!!

3 November 2020, 9:02 am
love cheat - updatenews360
Quick Share

விழுப்புரம்: 6 ஆண்டுகளாக பெண் காவலரை காதலித்து குடும்பம் நடத்திவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட காவலரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் பிடாகம் கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவர் விழுப்புரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல், செஞ்சி பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண், சென்னையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் இருவரும் சென்னையில் ஒரே இடத்தில் சிலகாலம் பணியாற்றினர். அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த இவர்கள், தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து, அருள் விழுப்புரம் ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்துவிட்டார்.

தற்போது, அருள் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், காவலர் அருள் என்னை 6 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து பலமுறை உல்லாசமாக இருந்துள்ளோம். இது அவருடைய குடும்பத்தினருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது அருளுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளது. எனவ, என்னை ஏமாற்றிய அருள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அருள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 24

0

0