தீபாவளி வாழ்த்து சொல்லாத ஆட்டோ டிரைவருக்கு தர்ம அடி: மூவர் மீது வழக்கு..!!

Author: Aarthi Sivakumar
6 November 2021, 1:55 pm
Quick Share

கோவை: கோவையில் தீபாவளி வாழ்த்து சொல்ல மறுத்த ஆட்டோ டிரைவருக்கு அடி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (26). ஆட்டோ டிரைவர்.

இவர் தீபாவளி அன்று தனது வீட்டின் முன்புறம் உள்ள மரத்தடியில் அமர்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த வேலு, ராஜசேகர் மற்றும் பிரபாகரன் ஆகியோர் வந்தனர்.

அவர்கள் பிரகாசின் அருகில் சென்று தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆனால் பிரகாஷ் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் மூவரும் சேர்ந்து பிரகாசை தகாத வார்த்தையில் பேசி தாக்கினர்.

இதுகுறித்து பிரகாஷ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவளி வாழ்த்து தெரிவிக்க மறுத்த ஆட்டோ டிரைவரை தாக்கிய வேலு, ராஜசேகர் பிரபாகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 394

0

0