ஆடு மேய்க்கச் சென்ற மாணவி மீது சாதிய தாக்குதல் : நடவடிக்கை கோரி தந்தை மனு
28 September 2020, 1:37 pmகோவை : ஆடு மேய்க்கச் சென்ற தனது மகளை சாதியை சொல்லி இழிவு படுத்தி, தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவரின் தந்தை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை சூலூர் எடுத்த செஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 52). இவரது மகள் நிம்சிராணி (வயது 21).
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நிம்சி ராணி கடந்த 23ம் தேதி அதே பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார்.
அப்பொழுது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ரத்தினசாமி என்பவர் நிம்சிராணியை சாதிரீதியாக இழிவுபடுத்தியும், கற்களால் அடித்து தலை முடியை அறுத்தாகவும் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரத்தினசாமி இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் ரத்தினசாமியை உடனடியாக தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் நிம்சிராணியின் தந்தை சுரேஷ் இன்று மனு அளித்துள்ளார்.
0
0