20 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடிக்கும் தண்ணீர்… குழாய் உடைந்து வீணாகும் நீர் ; செல்ஃபி எடுத்து அலப்பறை செய்யும் மக்கள்…!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 4:49 pm

சிவகங்கை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீச்சி அடிக்கும் தண்ணீரில் செல்பி மக்கள் அலப்பறை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பட்டமங்கலம் செல்லும் சாலையில் கொட்டகுடி ஆற்று பாலத்தின் அருகில் காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து 20 அடி உயரம் வரை தண்ணீர பீச்சி அடித்து வருகிறது.

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் அருகில் உள்ள வயல்வெளிலும் கிராம பகுதியில் தேங்கி நிற்கிறது. பட்டமங்கலத்தில் இருந்து சொக்கநாதபுரம் செல்லும் அப்பகுதி மக்கள் இதை வேடிக்கை பார்ப்பதும், செல்பி எடுப்பதும் புகைப்படம் எடுப்பதுமாக ரசித்துச் செல்கின்றனர்.

குடிநீருக்காக பலரும் அவதி அடைந்து வரும் நிலையில், தண்ணீர் வீணாகி செல்வது காண்போரை வேதனையை உண்டாக்கியுள்ளது.

https://player.vimeo.com/video/867449680?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

எனவே காவேரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் இதுபோன்ற குழாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!