காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பு : தண்ணீரில் மிதக்கும் பயிர்கள்… யார் காரணம்..? திக்குமுக்காடும் விவசாயிகள்..!!

Author: Babu Lakshmanan
9 November 2021, 2:14 pm
Farmers - updatenews360
Quick Share

கரூர் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால், லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி விளைநிலத்தில் புகுந்து பயிர்கள் வீணாகியது. இது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து மதுரை மேலூருக்கு இராட்சச குழாய் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் செல்கிறது. இந்த நிலையில் லாலாபேட்டை அடுத்த மகிளிப்பட்டி வாய்க்கால் பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலைகளில் வீணாக ஓடியது. மேலும், குழாய் உடைப்பு காரணமாக தண்ணீர் பீச்சி அடித்துக் கொண்டு விளை நிலத்தில் புகுந்து ஓடியது. இதனால், சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை, நெல், வெற்றிலை உள்ளிட்ட சாகுபடிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தார்சாலை உடைப்பு ஏற்பட்டதால் புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, பஞ்சப்பட்டி என பத்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் செல்லும் முக்கிய சாலை போக்குவரத்து தடைபட்டது. சுமார் 20 கிலோமீட்டர் சுற்றி மாற்றுவழியில் செல்லும் நிலை ஏற்பட்டது. தரமற்ற குழாய் அமைக்கப்பட்டதால் மாதத்திற்கு ஒரு முறை இதேபோல் உடைப்பு ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப் படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டினர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்ட துணை செயற்பொறியாளரை முற்றுகையிட்ட விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 520

0

0