“என்னது! கள்ளச்சாராயம் விற்றவருக்கும், அரசியல் கட்சிகாரர்களுக்கும் தொடர்பா?”- விசாரணையில் கசியும் தகவல்!

Author:
22 June 2024, 3:01 pm
Quick Share

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஐ தாண்டி உள்ளது. இது தொடர்பாக முக்கிய குற்றவாளியாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து சிபிசிஐடியினர் குற்றவாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவர்களுக்கு பின்னால் அரசியல் பலம் உள்ளதா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு சம்பந்தப்பட்ட இடங்களை சிபிசிஐடியினர் சோதனை செய்தபோது கட்சிகளின் வரிசையில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்படம் கிடைத்ததுள்ளது. அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு அரசியல் பலம் இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

மேலும் புகைப்படங்களில் உள்ள பிரமுகர்கள் தற்போது பொறுப்பில் உள்ளார்களா? கைது செய்யப்பட்டவர்களில் யாரேனும் அரசியல் கட்சியில் உள்ளார்களா? அல்லது இதற்கு முன்னால் அவர்கள் கட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறார்களா?என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 264

0

0