16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கு:மற்றொரு குற்றவாளி கைது…

4 December 2019, 10:57 pm
Karithi Arrest-Updatenews360
Quick Share

கோவை: சீரநாயக்கன்பாளையத்தில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக பப்ஸ் கார்த்திக்கை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 26ம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டம் முடித்து சீரநாயகன்பாளையத்தில் உள்ள பூங்காவிலிருந்து தனது காதலனுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 11ம் வகுப்பு சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் வழிமறித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று ஆடைகளை அகற்றி மொபைலில் வீடியோ பதிவு செய்ததுடன், பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அதேப்பகுதியை சேர்ந்த ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான மணிகண்டன் என்பவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நேற்று கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி கார்த்திக் என்ற பப்ஸ் கார்த்திக்கை ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.