எச்சரிக்கை…சாலையை கடக்கும் போது தேவை கவனம்: அதிர வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி!!

Author: Aarthi Sivakumar
22 September 2021, 1:37 pm
Quick Share

திருப்பூர்: இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் அதிவேகமாக சென்ற காரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கதிர்வேல் மற்றும் அவரது மனைவி மாலதி. இருவரும் பனியன் நிறுவனத்தில் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள்.‘

இந்நிலையில் நேற்று மாலை மாலதி பனியன் நிறுவனத்தில் இருந்து பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக காமராஜர் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அச்சமயத்தில், சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்த காரை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அதி வேகமாக வந்த கார் மாலதியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மாலதி பலத்த காயம் ஏற்பட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் உயர் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை சிசிடிவி காட்சிகளை வைத்து அவிநாசி போலீசார் தேடி வருகின்றனர்.

Views: - 562

0

0