பட்ட பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..

7 March 2021, 5:48 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் பட்ட பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

காஞ்சிபுரம் நகரை ஓட்டியுள்ளது மாருதி நகர் பகுதி. இங்கு புதிய குடியிருப்பு பகுதிகள் விரைவாக வளர்ந்து வரும் நிலையில் பட்டபகலில் இப்பகுதியில் வலம்வந்த இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர் அப்பகுதியில் நோட்டமிட்டவாறே செல்வதும் யாரும் வீட்டருகே இல்லை உணர்ந்து வெளியே நிறுத்தி வைக்கபட்டிரூந்த சைக்கிளை திருடி அலேக்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பட்டபகலில் எவ்வித அச்சமின்றி இளைஞர் இருசக்கர வாகனத்தில் உலாவருவதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் .. சைக்கிள் என்பதை தவிர்த்து நாளை இந்த மூன்று இளைஞர்கள் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட விபரிதத்தை தவிர்க்க காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்பதே புறநகர் வளர்ச்சி குடியிருப்பு வாசிகள் கோரிக்கையாக உள்ளது.

Views: - 16

0

0