வருமான வரித்துறையினரிடம் சிக்கிய பிரபல நகைக்கடை : வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரால் நடவடிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2022, 2:12 pm

விழுப்புரம் : பிரபல நகைக்கடை நிறுவனமான சுபவள்ளி விலாஸ் நிறுவனத்தின் நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரத்தில் உள்ள வள்ளி விலாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நகை கடைகள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக விழுப்புரம் புதுச்சேரி சாலையில் விழுப்புரம் நகரில் அமைந்துள்ள சுப வள்ளி விலாஸ் நகை கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை பத்து முப்பது மணிக்கு சோதனை தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை முன்னிட்டு சோதனை நடைபெறுவதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 1587

    0

    0