கோவை ஆட்சியருக்கு வந்த செல்போன் அழைப்பு : ஆபாச வார்த்தைகளால் மிரட்டல் விடுத்த ஆசாமி அரெஸ்ட்!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2021, 4:01 pm
கோவை : கோவை ஆட்சியருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் சமீரன். நேற்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி, கடும் வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாமல் மிரட்டல் விடுக்கும் தோனியின் பேசினார்.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மிரட்டல் விடுத்த ஆசாமி எந்த ஊர் என நடத்திய விசாரணையில் சேலத்திலிருந்து பேசி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சேலம் சைபர் கிரைம் போலீசார் உஷார்படுத்தப்பட்டு களத்தில் இறங்கினர். மிரட்டல் விடுத்த செல்போனுக்கு சொந்தக்காரர் இரும்பாலை பக்கமுள்ள சிற்றனூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அவர் பழைய பேப்பர் வாங்கும் கடை வைத்துள்ளார்.
அவரை பிடித்து விசாரித்ததில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையில் வைத்திருந்த செல்போனை யாரோ திருடிச் சென்று விட்டன என கூறினார். கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த ஆசாமி சிற்றூரில் இருந்து குரங்குசாவடி வரை சென்றதும் செல்போன் டவர் மூலம் தெரியவந்தது.
அந்த ஆசாமி 20 பேருக்கு செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது. அதன்பிறகு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து உள்ளானர்.
கிருஷ்ணனின் செல்போனை திருடியது யார்? அப்படியே யாராவது எடுத்துச் சென்றால் கூட கோவை கலெக்டரின் செல் நம்பர் எண்ணை கண்டுபிடித்து மிரட்டல் விடுக்க காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0
0