பெண்ணிடம் செல்போன் பறிப்பு : ரவுடியை அரிவாளால் வெட்டிய சிறுவர்கள் : அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!
Author: kavin kumar21 ஜனவரி 2022, 2:44 மணி
திருச்சி : திருச்சி அருகே செல்போன் பறித்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் ரவுடியை சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த ரவுடி தாஜூதீன். இவரது சகோதரியிடம் சில சிறுவர்கள் மிரட்டி செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தாஜூதீன் சிறுவர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று சகோதரியின் செல்போனை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு சிறுவன் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாஜூதீன் கையை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சிராஜ் வெட்டப்பட்ட சம்பவத்தால் காமராஜ் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த அரியமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இது தொடர்பாக அரியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறையினர் கைபற்றிய சிசிடிவி காட்சியில் சிறுவர் ஒருவன் அரிவாளை எடுத்துக் கொண்டு செல்வதும், விளம்பர பதாகையை கழட்டிக் கொண்டு அடிப்பது போன்றும், மற்றொரு நபர் கத்தியை எடுத்து அங்கிருந்து ஓடுவது போன்றும் பதிவாகியுள்ளது.
1
0