பூப்பறித்து கொண்டிருந்த மூதாட்டியின் வாயை பொத்தி 9 சவரன் தாலி செயின் பறிப்பு : தோட்டத்தில் புகுந்த மர்மநபரை தேடும் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 1:04 pm

பூந்தோட்டத்தில் அதிகாலையில் பூ பறித்துக்கொண்டிருந்த மூதாட்டியின் வாயை மூடி தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காளவாய் பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவரது மனைவி 70 வயதுடைய சின்னம்மாள்.

இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீட்டருகே உள்ள தனது சம்பங்கி பூ தோட்டத்தில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக பூ பறித்துக்கொண்டிருந்தார்.

அப்போது பூந்தோட்டத்தில் பதுங்கி இருந்த மர்ம நபர் ஒருவர் சின்னமாளின் வாயை மூடிக்கொண்டு அவர் அணிந்திருந்த 9 சவரன் தாலி செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அப்போது சின்னம்மாள் சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபரை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அந்த மர்ம நபர் அங்கிருந்த வயல்வெளியில் குதித்து தலைமறைவாகி தப்பிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து சின்னம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிகாலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரை வலை வீசி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!