தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
27 November 2020, 10:20 amநிவர் புயல் தாக்கத்தினால் இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தை மிரட்டிய நிவர் புயல் தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மேலும் சில மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்கிளல் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0
0