தமிழக மக்களே உஷார்…இன்றும் திடீர் கனமழைக்கு வாய்ப்பு இருக்குது: அலர்ட் அறிவித்த வானிலை ஆய்வு மையம்..!!

Author: Aarthi Sivakumar
18 October 2021, 12:26 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் திடீர் கனமழையும் பெய்து மக்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறது.

குறிப்பாக, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்.

Image

தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image

Views: - 329

0

0