கொளுத்தும் கோடையை குளிர்விக்கும் மழை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!!

4 May 2021, 6:10 pm
veyil summer - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாலை முதல் காலை வரை வெக்கை அதிகரிக்கும்.

chennai metrology - updatenews360

இந்நிலையில் தமிழகத்தில் கோடையில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் இன்று முதல் தொடங்கியது.பொதுவாக அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 25 வெயில் சுட்டெரிக்கும்.

அதன்படி வருகிற மே 29ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும். ஏற்கனவே பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரம் நிலவும் நாட்களில் மற்ற நாட்களை விட வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்நிலையில், கோடை மழை சற்று குளுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 84

0

0