லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி-2’ ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.! வைரல் புகைப்படங்கள்..!

Author: Rajesh
14 June 2022, 6:33 pm
Quick Share

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையை படைத்தது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான சந்திரமுகி படத்தின் பாகம்-2 இயக்கயிருப்பதாக பி.வாசு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்காக நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் மற்றும் அனுஷ்கா,வடிவேலு உள்ளிட்டோர் சந்திரமுகி பாகம் 2 திரைப்படத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் சந்திரமுகி திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் பாகம் இரண்டை தயாரிக்க இருந்த நிலையில், தற்போது லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சந்திரமுகி பட டைட்டில் உரிமையை சிவாஜி ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனர் ராம்குமாரிடம் இருந்து 1 கோடி ருபாய் கொடுத்து லைகா நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் சிஷியானான ராகவாலாரன்ஸ், சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நிலையில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை அனுஷ்கா, பாகுபலி திரைப்படத்திற்கு பின் தமிழில் சந்திரமுகி 2 நடிக்க ஆவலுடன் உள்ளார் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Views: - 452

1

1