இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி: ரயில் சேவையில் மாற்றம்…!!

24 February 2021, 10:52 am
1southern railway - updatenews360
Quick Share

சென்னை: இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் எழும்பூர்-நெல்லை, கோவை-நாகர்கோவில் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கங்கைகொண்டான்-நெல்லை, கோவில்பட்டி-கடம்பூர், மதுரை-நெல்லை இடையே இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர்-நெல்லை (வண்டி எண்:02631) மற்றும் நெல்லை-எழும்பூர் (02632) சிறப்பு ரயில்கள் மதுரை-நெல்லை இடையிலும், நாகர்கோவில்-கோவை (06321) மற்றும் கோவை-நாகர்கோவில் (06322) சிறப்பு ரயில்கள் நாகர்கோவில்-மதுரை இடையிலும், கே.எஸ்.ஆர் பெங்களூரு-நாகர்கோவில் (07235) மற்றும் நாகர்கோவில்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (07236) சிறப்பு ரெயில்கள் விருதுநகர்-நாகர்கோவில் இடையிலும், நாகர்கோவில்-கோவை (02667) மற்றும் கோவை-நாகர்கோவில் (02668) சிறப்பு ரயில்கள் மதுரை-நாகர்கோவில் இடையிலும், தூத்துக்குடி-மைசூரு (06235) மற்றும் மைசூரு-தூத்துக்குடி (06236) சிறப்பு ரெயில்கள் மதுரை-தூத்துக்குடி இடையிலும் வருகிற 28ம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி-திருவனந்தபுரம் (வண்டி எண்:02627), திருவனந்தபுரம்-திருச்சி (02628) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் வருகிற 28ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாதர்-நெல்லை (06071) சிறப்பு ரெயில் வருகிற 27ம் தேதி வரை விருதுநகர்-நெல்லை இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-குருவாயூர் (06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் 24, 25, 26 மற்றும் 28ம் தேதிகளில் விருதுநகர், தென்காசி, நெல்லை வழியாக இயக்கப்படும். சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சிமணியாச்சி வழித்தடங்களில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 6

0

0