ஒரே மாதத்தில் கோவையில் இரு முறை ஆட்சியர் மாற்றம் : 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!!

Author: Udayachandran
13 June 2021, 7:31 pm
Cbe New Collector - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 24 மாவட்ட் ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகர்ததில் 44 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் 24 மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அஙநத வகையில் சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன், புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு, தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ், நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ், கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர், விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, தேனி ஆட்சியராக முரளிதரன், செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், தேனி ஆட்சியராக முரளிதரன்,நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், திண்டுக்கல் ஆட்சியராக விசாகன், கோவை ஆட்சியராக சமீரான், திருப்பூர் ஆட்சியராக வினீத், அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்துக்கு மீண்டும் ஆட்சியர் மாற்றம்

கோவை மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்தவர் ராஜாமணி. இவர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு, பதிலாக புதிய கலெக்டராக எஸ். நாகராஜன் நியமிக்கபட்டு பொறுப்பேற்றார். இவர் தற்போது நில நிர்வாக துறை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார் .

இவருக்கு பதிலாக கோவை மாவட்ட புதிய கலெக்டராக ஜி.எஸ் .சமீரன் நியமிக்கபட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு சுற்றுலா துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல நாகப்பட்டினம், அரியலூர் , திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, மாவட்ட கலெக்டர்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 24 ஐ. ஏ. எஸ், அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 353

0

0