ஓட ஓட விரட்டி கட்டையால் தாக்கி செல்போன் பறிப்பு : கோவையில் திக்..திக்.. இளைஞர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 2:13 pm

கோவை ராக்கிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஷாமல் பாரா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவர் பணி முடிந்து சென்று கொண்டிருக்கையில், வழியில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்கள் அவரிடம் செல்போனை தரும்படி மிரட்டியுள்ளனர்.

ஆனால் அவர் செல்போனை தராமல் அங்கிருந்து ஓடி அருகில் இருந்த ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்தார். இருப்பினும் அந்த இளைஞர்கள் அவரை மரக்கட்டையால் தாக்கிவிட்டு செல்போனை பறித்து சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலைப்பகுதியில் ஆறு தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட துடியலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா(21) மற்றும் சூர்யா(19) ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!