செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டம்…? 2 நாய்களை கொன்றதால் மக்கள் பீதி…!!

11 December 2019, 3:41 pm
Chengalpet Cheetah- updatenews360
Quick Share

செங்கல்பட்டு : சிங்கப்பெருமாள் கோவில் அருகே நெடுங்குன்றம் பகுதியில் இரண்டு நாய்கள் கொல்லப்பட்டதால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறை கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த செங்குன்றம் கிராமம் உள்ளது. இது அஞ்சூர் செங்கல்பட்டு வல்லம் ஆகிய காப்புக் காடுகளை இணைக்கும் பகுதியாகும். இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு நாய்கள் கடித்து குதற பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் ஒரு நாய் கடி பட்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம் தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு வனச்சரக ஊழியர்கள் இன்று செங்குன்றம் காப்புக்காடு பகுதிகளில் இரண்டு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவானது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்கு செல்லக்கூடாது, ஆடு, மாடு, நாய்கள் போன்றவற்றை வனத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்