பூனையால் வந்த வினை : 2 வயது குழந்தை பலி!!

6 September 2020, 11:14 am
Child Dead - Updatenews360
Quick Share

சென்னை : பூனை வீட்டில் உள்ள டிவியின் மேல் குதித்ததால், டிவியின் நாற்கலி தூங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை மேல் விழுந்தத்தில் குழந்தை பலியானது.

சென்னை அயனாவரம் சூளைமேடு தெருவை சேர்ந்தவர் மாதர் மொய்தீன். ஏ. சி. மெக்கானிக்கான இவருக்கு மனைவி ரேஷ்மா மற்றும் 2 வயது மகள் நாஷியா பாத்திமாவுடன் வசித்து வருகிகறார். நேற்று மாலை 5 மணியளவில் குழந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தது.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஒரு பூனை பீரோ மீது ஏறி அங்கிருந்து டீவியின் மேல் குதித்தது. இதில் டிவி வைக்கப்பட்டு இருந்த நாற்காலி விழுந்ததால் டிவி கீழே தரையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தின் மீது விழுந்தது.

குழந்தையின் மூக்கு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. குழந்தையை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது செல்ல மகள் இறந்துவிட்டதை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்கள் கண்களை கலங்க வைத்தது.

Views: - 0

0

0