பத்திரிக்கையாளர்களை இப்படித்தான் நடத்துவதா..? துர்நாற்றத்தில் செய்தியாளர்களுக்கு அறை : தமிழக அரசு மீது அதிருப்தி..!!!

Author: Babu Lakshmanan
12 October 2021, 11:53 am
chengalpattu election - updatenews360
Quick Share

செங்கல்பட்டு : உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஊடகவியலாளர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கப்படாததால் அரசின் மீது அதிருப்தி எழுந்துள்ளது.

இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்களுக்கு தேர்தலுக்கான அனுமதி அடையாள அட்டையினை நேற்று காலை மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலகதில் போராடி செய்தியாளர்கள் வாங்கினர்.

இதனை தொடர்ந்து, அச்சிறுப்பாக்கம் அரசினர் மகளீர் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு கழிவறை அருகே அறை ஒதுக்கப்பட்டது. அங்கு துர்நாற்றம் வீசுவதோடு, அந்த அறையில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும், குடிநீர் கூட வைக்கப்படவில்லை. இதன் காரணமாக பத்திரிக்கையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

“ஊடக மற்றும் செய்தியாளர்கள் முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்தது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் அடிப்படை வசதிகளை செய்துத்தர கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்று பத்திரிக்கையாளர்கள் புலம்புகின்றனர்.

Views: - 350

0

0