சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 3 பேரின் காவல் டிச.,14ம் தேதி வரை நீட்டிப்பு

30 November 2020, 5:45 pm
chennai gun shoot - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலில் சந்த் (வயது 74) சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 11ம் தேதி இவரையும், மகன், மனைவி ஆகியோரும் துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், ஷீத்தலின் மனைவி ஜெபமாலாவின் குடும்பத்தினர்தான் இந்த கொலைகளை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு, ஜெபமாலாவை தேடி வந்தனர். இந்த சூழலில், கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய 3 பேரை புனேவில் வைத்து போலீசார் கைது செய்தனர். பிறகு, அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, போலீசாரின் கோரிக்கையை ஏற்று 3 பேருக்கும் 10 நாள் போலீஸ் காவல் விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தலைமறைவாக இருந்த ஷீத்தலின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரது சகோதரர் விகாஷ், ராஜேஷ் ஆகியோரை டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மாமனார் தலில் சந்த் மற்றும் அவரது உறவினர் விஜயகுமார் உள்ளிட்டோர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், அவர்களை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட ஜெயமாலா பரபரப்பு தகவலை வெளியிட்டார். இதையடுத்து, இவர்களுக்கு துப்பாக்கி கொடுத்து உதவிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான ஜெயமாலா, விஷால், ராஜீவ் ஷிண்டே ஆகியோரின் காவலை டிச.,14ம் தேதி வரை நீட்டித்து ஜார்ஜ்டவுன் எட்டாவது நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 0

0

0