மோகன்லால் ஜுவல்லரி உள்பட சென்னையில் 32 இடங்களில் ஐடி ரெய்டு..!!!

10 November 2020, 1:30 pm
Income tax - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் 32 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை சவுக்கார்பேட்டையில் அமைந்துள்ள மோகன்லால் ஜுவல்லரியில் 20க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜுவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்லால் கபாரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மொத்த வியாபார நிறுவனமான மோகன்லால் ஜுவல்லரியுடன் தொடர்பில் மும்பை நிறுவனங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது.

மேலும், போலி நகை சர்ச்சையில் சிக்கிய கடையநல்லூர் ஏ.ஐ.கே. நகைக் கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 46

0

0