காவல் நிலையத்தில் நடந்த வளைகாப்பு…! பெண் காவலரை நெகிழ வைத்த சக காவலர்கள்…!!

Author: kavin kumar
20 January 2022, 1:52 pm
Quick Share

சென்னை: சென்னையில் பெண் காவலருக்கு, காவல் நிலையமே ஒன்று சேர்ந்து வளைகாப்பு விழா நடத்தி அசத்தியிருப்பது சென்னை மாநகர காவல்துறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் எல்லைக்குட்பட்ட மாதவரம் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணிபுரிபவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தா. இவரது கணவர் சதீஷ் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் மோனிஷா என்ற பெண் உள்ளார். இந்நிலையில் அரவிந்தா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் பணிபுரியும் மாதவரம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரவிந்தாவுக்கு இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ் மற்றும் ஸ்ரீஜா முன்னிலையில் கோலாகலமாக வளைகாப்பு விழா நடத்தினர்.

7 வகையான உணவுகள் , 9 வகையான பழங்கள் , வெள்ளி வளையல் , பட்டு புடவை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசை வைத்து முறைப்படி அரவிந்தாவை அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்து மாலை அணிவித்து ஒருவர் பின் ஒருவராக அந்தப் கர்ப்பிணி பெண் காவலருக்கு கண்ணங்களிலும் கைகளிலுல் சந்தனம் பூசி நெற்றியில் திலகம் வைத்து , கைகளில் வளையல் அணிவித்து , உணவுகளை ஊட்டி , மலர்தூவி , ஆரத்தி எடுத்து அவரை மனதார வாழ்த்தினார்கள். காவல் நிலையத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியால் அப்பகுதி மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

Views: - 205

0

0