ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்… செய்வதறியாது தவித்த பெற்றோர்… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 2:43 pm

சென்னை அருகே குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அகற்றினர்.

சென்னை போரூர் மங்களா நகர் பதினோராவது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் – ஆனந்தி தம்பதியினர். இவர்களது ஒன்றரை வயது மகன் கிருத்திக் வழக்கமாக வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டின் சமையலறையில் இருந்த பாத்திரம் எதிர்பாராத விதமாக, விளையாடும் போது குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்டது.

நீண்ட நேரம் போராடியும் குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தவித்து வந்துள்ளனர். தலையில் சிக்கிய பாத்திரத்தால் வலி பொறுக்காமல் குழந்தையும் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அழுது கொண்டு இருந்துள்ளது.

பின்னர், மதுரவாயல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோமதி சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை நவீன கத்தரி கொண்டு, இலாவகமாக குழந்தைக்கு எந்த ஒரு காயமும் இன்றி அகற்றினர். குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை அகற்றியதும் குழந்தையின் பெற்றோர்கள் நிம்மதியடைந்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?