சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் திடீர் தீ : பேருந்து எரிந்து சேதம்

14 November 2020, 2:11 pm
Omni Bus Fire - Updatenews360
Quick Share

சென்னை : கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதான பேருந்து ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பேருந்து கொளுந்து விட்டு எரிந்தது.

உடனே இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில 4 பேருந்துகள் சேதம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.

Views: - 22

0

0