சென்னையை சுற்றி வளைக்கும் கொரோனா : கூடுதல் செவிலியர்கள் நியமனம்..!!

19 April 2021, 5:18 pm
TN Corona - Updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரையில் சுமார் 11 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் 3 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, கூடுதல் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வார்டுகளில் பணிபுரிவதற்காக கூடுதலாக 660 செவிலியர்களை மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் நியமித்துள்ளது.

Views: - 84

0

0