சென்னையில் டிராக்டர்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடக்கம் (வீடியோ)

26 March 2020, 5:57 pm
Chennai - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் டிராக்டர்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்களை மாநகராட்சி ஆணையர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 650-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இதுவரையில் 27 பேரிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸின் சமூக பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு ஒருபுறம் இருந்தாலும் நகர்ப்புறங்களில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் கிருமிநாசினி தெளித்தல், சுத்தம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டிராக்டர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் 9 இயந்திரங்களின் சேவையை ஆணையர் கோ. பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் (சுகாதாரம்) பி. மதுசுதன் ரெட்டி, தலைமை பொறியாளர்கள் எஸ். ராஜேந்திரன், என். மகேசன் உள்பட பல்வேறு கலந்து கொண்டனர்.

Leave a Reply