பண்டிகை காலம் தொடங்குது.. மறந்திறாதீங்க..! அப்புறம் சீல் வைக்கப்படும் ; வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை..!!

22 October 2020, 1:08 pm
Chennai shops corona - updatenews360
Quick Share

சென்னை : பண்டிகை காலங்களில் அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளொன்று 6 ஆயிரம் வரை தொட்டு விட்டு, தற்போது கட்டுக்குள் வருகிறது. கடந்த 4 நாட்களாக 3 ஆயிரம் அளவிலேயே பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதற்கு, மக்களின் ஒத்துழைப்பும், அரசின் சிறப்பான தடுப்பு நடவடிக்கையே காரணமாக இருந்து வருகிறது.

அண்மையில், கேரளாவில் ஓணம் பண்டிகைக்காக ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளினால், முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதிப்புகள் தென்பட்டு வருகின்றன.

Chennai Corporation-UpdateNews360

இந்த நிலையில், தமிழகத்தில் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன. இதையொட்டி, கடைகளை இரவு 10 மணி வரை திறக்க தமிழக அரசும் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு வரும் நிலையில், பண்டிகை காலங்களில் அரசின் வழிகாட்டு முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பண்டிகை காலங்களில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பாதுகாப்பு விதிகளை கண்காணிக்க மண்டல அளவில் சிறப்பு குழுக்க ஏற்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா..? என்பதை கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு உடனடியாக சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 0

0

0