சூரியமூர்த்தியின் வழக்கை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு?
Author: Prasad1 August 2025, 12:30 pm
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் எடப்பாடி அணி ஓபிஎஸ் அணி என உருவான நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமாக எழுந்தது. அதனை தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த சூர்யமூர்த்தி என்ற வழக்கறிஞர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து சூரியமூர்த்தியின் வழக்கை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவில், “திண்டுக்கலைச் சேர்ந்த சூர்யமூர்த்தி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது, ஆதலால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமியின் வழக்கில் சூர்யமூர்த்தி தரப்பில், “அதிமுக விதிமுறைகளின் படி அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்” என பதிலளித்தது. இந்த நிலையில் சூர்யமூர்த்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிய வருகிறது.
