‘ஓசி-யில தான் குடிக்கப் போனேன்… FINE எல்லாம் கட்ட முடியாது’ ; குடிபோதையில் போலீசாரிடம் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 1:54 pm

சென்னை : சென்னையில் குடிபோதையில் இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் அலப்பறை செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மாநகர போலீசார் வழக்கம் போல நேற்றிரவு வாகன ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையின் ஓரத்தில் அசாதாரணமாக இருந்த இளம்பெண் ஒருவர் தனது பைக்கை நிறுத்திக் கொண்டு, அழுது கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தலைக்கேறிய போதையில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்னர், அவரை பக்குவமாக அழைத்து வந்து, மது அருந்துபவர்களை பரிசோதிக்கும் கருவியில் ஊதுமாறு கூறினர். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில், எந்தவித அபராதமும் விதிக்காமல் உங்களை விட்டுவிடுகிறோம், இந்த கருவியில் பலூன் ஊதுவது போன்று ஊதுமாறு கூறியுள்ளனர். அதனை நம்பிய அந்தப் பெண்ணும் ஊதியதில், அவர் தலைக்கேறிய போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வாகனத்தை விட்டுவிட்டு வீட்டுக்கு செல்லுமாறும், காலையில் வந்து வாகனத்தை எடுத்துக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், இதனை ஏற்க மறுத்த அந்த இளம்பெண்ணோ, “ஆம், நான் ஓசியில் தான் குடிக்கப் போகிறேன். தினமும் இந்த வழியில்தான் குடிக்கச் செல்கிறேன். இன்னைக்கு மட்டும் எதற்கு பிடிக்கறீர்கள்..? என்னிடம் காசு ஏதுமில்லை. ஊதினால் விட்டு விடுகிறேன் என சொன்னீர்கள் தானே, இப்ப எதுக்கு ஃபைன் போடுறீங்க..? என்று கூறி அலப்பறை செய்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!