வீட்டு உரிமையாளரிடம் வூடு கட்டிய போதை ஆசாமிக்கு நேர்ந்த கதி… சிகிச்சை கொடுக்க முடியாமல் திணறிய டாக்டர்கள்..!!

19 April 2021, 1:53 pm
fight - updatenews360
Quick Share

சென்னை : வாடகை வீட்டில் குடியிருக்கும் தாய் மற்றும் சித்தியிடம் தகராறு செய்த போதை ஆசாமிக்கு வீட்டின் உரிமையாளர் ஆணி பதித்த கட்டையால் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை புளியந்தோப்பு அருகே அருள் (35) என்பவர் அவரது தாய் ராஜேஷ்வரி, சித்தி சரஸ்வதி ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மதுவுக்கு அடிமையான அருள், தினமும் குடித்து விட்டு வந்து குடும்பத்தினரிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றிரவு வீட்டிற்கு வெளியே வந்து நின்றுகொண்டு தாய் மற்றும் சித்தியை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளர் பெருமாள் (18) என்பவர் ஏன் அடிக்கடி இங்கு வந்து சத்தம் போடுகிறாய் என தட்டிக்கேட்க அவரை தாறுமாறாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு கண்ணம் வீங்கியது. முகத்தின் சில பகுதிகளில் ரத்தம் சொட்டியது.

வலி தாங்க முடியாத நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பெருமாள், அருகில் இருந்த ஆணி பதித்த காட்டையை எடுத்து தாறுமாறாக அருளை விளாசி எடுத்தார். இதில் மண்டை முழுவதும் ஆணிகள் பொத்து அருளுக்கு ரத்தம் வடிந்தது. உடனடியாக செம்பியம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இருவரையும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

போதையின் உச்சத்தில் இருந்த அருள் மருத்துவருடைய சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அங்கும் தகராறு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 87

0

0