2வது நாளாக மளமளவென சரிந்தது தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
24 May 2024, 10:59 am

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க: கோவையில் பூங்காவில் விளையாடிய 2 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி ; அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்..!!!!!

நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், இன்றும் 2வது நாளாக அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53,200க்கும், கிராமுக்கு ரூ.100 சரிந்து ஒரு கிராம் ரூ.6,650க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல, வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 500 காசுகள் குறைந்து ரூ.96.50க்கும், ஒரு கிலோ ரூ.500 சரிந்து ரூ.96,500க்கும் விற்பனையாகி வருகிறது.

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?