இன்றும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு ; வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

Author: Babu Lakshmanan
19 October 2023, 11:10 am

இன்றும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு ; வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,680-ஆகவும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,585ஆக விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,055ஆகவும், தங்கம் சவரன் ரூ. 48,440ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • karnataka government secured for thug life movie release கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!