வார இறுதியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
13 October 2023, 11:23 am

வார இறுதியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. 

அதன்படி, சென்னையில் 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160  குறைந்து ரூ.43,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,410ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5,880ஆக விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் சவரன் ரூ. 47,040ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.75.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!