சென்னை ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து மரணம் – விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

Author: Shree
29 March 2023, 12:20 pm

சென்னை ஆவடி அருகே ஜிம் மாஸ்டரும், ஆணழகனுமான சபரிமுத்து என்கிற ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது 2 கிட்னிகளும் அவருக்கு செயலிழந்து இருப்பது தெரியவந்தது.

பின்னர் தொடர்ந்து விசாரித்ததில் இவர் நடுக்குத்தகை தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி செய்து வந்த ஆகாஷ் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணத்தில் அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டுள்ளார்.

இதனால் அவரது 2 கிட்னிகளும் செயலிழந்துள்ளது. தொடர்ந்து அவர் உடற்பயிற்சி செய்து வந்த நிலையில் தான் திடீரென ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் ஜிம் ட்ரைனர் மற்றும் உடற்பயிற்சி செய்யும் ஆர்வலர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?