“6 சவரன் நகையை அபேஸ் செய்த மாற்றுத்திறனாளி-அதிர்ச்சி அடைந்த மூதாட்டி!”

Author:
28 June 2024, 10:52 am

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரி. இவருக்கு வயது 63. இவர் ஒரு சர்க்கரை நோயாளி என்பதால் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அங்கு மருத்துவ காப்பீடு செய்து தருவதாக கூறி மாற்றுத்திறனாளி ஒருவர் அந்த மூதாட்டியிடம் பேசி மூளை சலவை செய்துள்ளார்.

மருத்துவ காப்பீடு செய்வதற்கு உங்களது நகையை காட்ட வேண்டும், இந்த பேப்பரில் கையெழுத்து பெற வேண்டும் என்று பல கதைகளை அந்த மூதாட்டியிடம் கூறி நடித்துள்ளார். அதையும் நம்பி அந்த மூதாட்டி தனது கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை கழட்டி அந்த நபரிடம் கொடுத்து பேப்பரிலும் கையெழுத்திட்டுள்ளார். ஏதோ காரணத்தை சொல்லி அந்த நபர் மருத்துவமனை விட்டு வெளியேறி ஓடிச் சென்று விட்டார். இதனை கண்ட மூதாட்டி அதிர்ச்சி அடைந்து அங்கு உள்ளவர்களிடம் கூறி கத்தி உள்ளார்.பின் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மாற்றுத்திறனாளி நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!