கடைசி நேரத்தில் எதுக்குயா வழக்கு? தடை விதிக்க நீதிபதி மறுப்பு : நாளை திட்டமிட்டபடி தாண்டவமாட வருகிறது ருத்ரதாண்டவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2021, 8:01 pm
Rudra Thandavam -Updatenews360
Quick Share

கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்ததால் நாளை ருத்ரதாண்டவம் வெளியாகிறது.

நடிகர் ரிச்சர்ட் ரிசி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஜிஎம்.பிலிம் கார்பரேசன் தயாரிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம்.

இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசிய தலைவர் சாம் யேசுதாஸ் என்பவர் சென்னை 15வது உதவி உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், திரைப்படத்தில் வசனம் மற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனவும், சிறுபான்மை கிறிஸ்தவர்களை தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இது இரு மதத்தினர் இடையில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதுவரை படத்தை திரையரங்கு மற்றும் ஓடிடி உள்ளிட்ட இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த 15 உதவி உரிமையில் நீதிமன்ற நீதிபதி, மனு தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், படத்தின் டிரைலர் மட்டும் வெளிவந்துள்ளது, முழு படத்தையும் பார்க்காமல் மனுதாரர் கருத்து யுகத்தின் அடிப்படையில் உள்ளது.

கடைசி நிமிடத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய நிலையில் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து நாளை திட்டமிட்டப்படி ருத்ரதாண்டவம் வெளியாக உள்ளது.

இதையடுத்து படத்தின் இயக்குநர் மோகன் ஜி, அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம்..
எந்த தடையும் இல்லை. ருத்ரதாண்டவம் நாளை திரையரங்குகளில் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Views: - 414

0

0