கனமழையில் இருந்து தப்புமா சென்னை…? அடுத்த 2 மணிநேரம் ரொம்ப முக்கியம் ; பள்ளிகளுக்கு போடப்பட்ட திடீர் உத்தரவு…!!

Author: Babu Lakshmanan
29 November 2023, 9:20 pm

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்னும் கனமழை நீடிக்கும் என்றும், டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் சென்னையில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு மணிநேரமாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இரவு 10 மணி வரை கனமழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் சென்னையில் அம்பத்தூர், கள்ளிகுப்பம், திருமுல்லைவாயில், அயப்பாக்கம், ஆவடி, பட்டாபிராம், பருத்திப்பட்டு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரம், மதுரவாயில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனிடையே, கனமழை பெய்து வருவதால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உடனடியாக களத்திற்கு சென்று பணியாற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?