‘என் பொண்டாட்டிய பிரிந்து வாழ நீதான் காரணம்’; ஆத்திரத்தில் மைத்துனரை வெட்டிக் கொன்ற நபர்… போலீஸில் சரண்..!

Author: Babu Lakshmanan
17 November 2022, 12:52 pm

சென்னை : செங்குன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ மைத்துனரே காரணம் என்கிற ஆத்திரத்தில் அவரை அரிவாள்மனையில் வெட்டி கொன்று காவல் நிலையத்தில் சரணடைந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கிண்டி மடுவான்கரை முதல்தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (36). இவர் வெல்டராக தொழில் புரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை பிரிந்து செங்குன்றம் நாரவாரிகுப்பம் வைத்தீஸ்வரன் தெருவில் உள்ள மைத்துனரான நாகராஜ் (25) என்பவரின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

murder - updatenews360

இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இருவரும் மதுபோதையில் இருந்த‌போது, ‘எனது மனைவி பிரிந்து வாழ நீதான் காரணம்’, என கூறி தகராறில் ஈடுபட்டதில், ஆத்திரமடைந்த செல்வக்குமார் வீட்டிலுள்ள அரிவாள்மனையால் தீடீரென மைத்துனர் நாகராஜை கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் இரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

murder - updatenews360

பின்னர், செங்குன்றம் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்து நடந்தவற்றை போலீசாரிடம் கூறினார். உடனடியாக போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த நாகராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

murder - updatenews360

இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்து விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!