தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

7 November 2020, 1:12 pm
rain tn - updatenews360
Quick Share

சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை நீடித்ததால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai metrology - updatenews360

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அடுத்த 72 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 11

0

0