நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு: முகக்கவசம் அனியாவிட்டால் ரூ.200 அபராதம்..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 11:49 am
metro train - updatenews360
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் வார நாட்களில் காலை 5.30 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும். இதர நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

அதேபோல ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் 10 வரை 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்தில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மெட்ரோ ரயில்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது, வரை முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த 176 பயணிகளிடமிருந்து ரூ.35,200 வசூலிக்கப்பட்டுள்ளது.

Views: - 284

0

0