நடமாடும் ரேஷன் கடைகள் : அமைச்சர் செல்லூர் ராஜு முக்கிய அறிவிப்பு.!
13 August 2020, 9:31 amசென்னை : தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் ரேசன் கடைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில கூட்டுறவு துறை பதிவாளர் அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது : தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் 3,501 நடமாடும் ரேசன் கடைகளை திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு கட்டடம், உள்ளாட்சி நிறுவன கட்டடம், மக்கள் கூடும் இடங்களில் நடமாடும் ரேஷன் கடையை திறக்கலாம் என்று கூறியுள்ளது.
3,501 ரேஷன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 5,36 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என கூறினார்.