இரவு நேரப் பணிக் காவலர்களுக்கு இனிப்புகளை வழங்கிய சென்னை காவல் ஆணையர்!!

14 November 2020, 10:18 am
agarval - updatenews360
Quick Share

சென்னை : தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் பொதுமக்கள் நிம்மதியாக பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில், நேற்று இரவு முதல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சென்னை தி.நகர், கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இரவு நேரப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் இனிப்புகளை வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை கூறினார். மேலும், அந்தப் பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து பேசிய அவர், “நேரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 34

0

0