ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் பஜ்ஜி, போண்டா திண்ணும் எலி… வெளியான ஷாக் வீடியோ ; முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

Author: Babu Lakshmanan
13 November 2023, 7:03 pm

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வரும் கேண்டீனில் பஜ்ஜி , போண்டாவை எலி தின்னும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு உள்மாவட்டங்களில் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த ஸ்டான்லி மருத்துவமனை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், உள்ளே தனியாருக்கு சொந்தமான இந்த கேண்டினில் அனைத்து விதமான உணவுகளும் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், அந்த உணவகத்தில் உள்ள பஜ்ஜி, போண்டா வைத்திருக்கும் பாக்ஸில் எலி விளையாடிக் கொண்டிருந்தது. அங்கிருந்த உணவுகளையும் தின்று கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்பாக கேண்டின் உரிமையாளரும் கேட்டபோது இது விற்பனைக்கானதல்ல. இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னை – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எலி உலாவும் கேண்டீனை இழுத்து மூட மருத்துவக்கல்லூரி முதல்வர் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!